/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதுச்சேரியில் பந்த்: விழுப்புரம்-புதுச்சேரி பஸ்கள் இயங்காததால் மக்கள் தவிப்பு

ADDED : செப் 18, 2024 11:20 PM

விழுப்புரம்: புதுச்செரியில் பந்த் காரணமாக, விழுப்புரம் மாவட்டத்திலிருந்து புதுச்சேரிக்கு போதிய பஸ்கள் இயங்காததால் பொது மக்கள் அவதிப்பட்டனர்.
புதுச்சேரியில் மின் கட்டண உயர்வைக் கண்டித்து, இண்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று பந்த் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், பெரும்பாலான கடைகள் மூடப்பட்டும், பஸ் உள்ளிட்ட வாகனங்களும் இயக்கப்படவில்லை.
விழுப்புரத்திலிருந்து, நேற்று காலை 6:00 மணி முதல் புதுச்சேரி மார்க்கத்தில் இயக்க வேண்டிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்காமல் நிறுத்தப்பட்டன.
இதன் பிறகு, காலை 7:00 மணி முதல் அரசு பஸ்கள் மட்டும் புதுச்சேரி மாநில எல்லையான மதகடிப்பட்டு வரை இயக்கப்பட்டது. சில டவுன் பஸ்கள் கண்டமங்கலம் வரை இயக்கினர். போராட்ட அச்சம் காரணமாக, தனியார் பஸ்கள் இயக்காமல் நிறுத்தியிருந்தனர். இதனால், விழுப்புரத்திலிருந்து, புதுச்சேரி பகுதிக்கு மருத்துவ சிகிச்சைக்கும், தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு வேலைக்குச் செல்லும் பொது மக்கள், பஸ் வசதியின்றி அவதிப்பட்டனர்.
இதே போல், திண்டிவனம்-புதுச்சேரி மார்க்கத்தில், புதுச்சேரி எல்லையான கோரிமேடு வரை தமிழக அரசு பஸ்கள் இயக்கப்பட்டது. அங்கிருந்து மாற்று வாகனங்கள் மூலம், பயணிகள் அவதிப்பட்டு சென்றனர்.