/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஜானகிபுரம் மேம்பாலத்தில் விபத்தை தடுக்க பேரிகார்டு
/
ஜானகிபுரம் மேம்பாலத்தில் விபத்தை தடுக்க பேரிகார்டு
ஜானகிபுரம் மேம்பாலத்தில் விபத்தை தடுக்க பேரிகார்டு
ஜானகிபுரம் மேம்பாலத்தில் விபத்தை தடுக்க பேரிகார்டு
ADDED : ஆக 29, 2025 12:15 AM

விழுப்புரம்: தினமலர் செய்தி எதிரொலியால், ஜானகிபுரம் மேம்பாலத்தில் விபத்தை தடுக்க பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
விழுப்புரம் அருகே ஜானகிபுரத்தில் இருந்து நாகப்பட்டினம் நான்குவழி புறவழிச்சாலை துவங்குகிறது. இதற்காக, ஜானகிபுரத்தில், சென்னை, விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மார்க்கங்களில் மூன்று மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதில், விழுப்புரத்தில் இருந்து புதுச்சேரிக்கு செல் லும் வாகனங்கள் செல்வதற்கு சர்வீஸ் சாலையில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. திருச்சி, புதுச்சேரி மார்க்கத்தில் இருந்து வரும் வாகனங்கள் மேம்பாலத்தின் கீழ் வந்து விழுப்புரத்திற்கு செல்லும் வகையில் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
அந்த சர்வீஸ் சாலையி லேயே, நாகப்பட்டினத்திற்கு எதிர் திசையில் வாகனங்கள் சென்று வருகின்றன. இங்கு, விபத்தை தடுக்க சாலை நடுவில் வைத்திருந்த பிளக்சிபல் ஸ்பிரிங் போஸ்ட்டுகள் சேதமடைந்தன.
இதனால், அப்பகுதியில் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் தடுக்க நிரந்தர தடுப்பு அமைக்க வேண்டும் என தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக, அங்கு பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.

