/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மேல்மலையனுார் கோவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி: இந்து முன்னணி கண்டனம்
/
மேல்மலையனுார் கோவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி: இந்து முன்னணி கண்டனம்
மேல்மலையனுார் கோவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி: இந்து முன்னணி கண்டனம்
மேல்மலையனுார் கோவில் பக்தர்களுக்கு அடிப்படை வசதி: இந்து முன்னணி கண்டனம்
ADDED : பிப் 20, 2026 04:49 AM
விழுப்புரம்: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து தராமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது என இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
ே மல்மலையனுார் அங்காள பரமேஸ்வரி கோவில் உலக புகழ்பெற்றதாகும். அமாவாசை நாட்களில் லட்சகணக்கான பெண்களும், ஆண்களும் இரவு தங்கி அம்மனை வழிபடுவது மாதந்தோறும் நடக்கும் நிகழ்வாகும்.
த ற்போது மயானக் கொள்ளை திருவிழாவும், தீமிதி விழா உட்பட 13 நாட்கள் விழா நடக்கிறது. இந்த கோவிலுக்கு கடந்த அமாவாசை தினத்தில் இரவு தங்கி வழிபட்ட லட்சகணக்கான பக்தர்கள் தெருவில் உறங்கியது மனதை வேதனைபடுத்தியது.
அடிப்படை சுகாதாரத்தோடு பக்தர்கள் தங்க எந்த ஏற்பாட்டையும், எந்தவொரு அடிப்படை வசதியும், அரசு நிர்வாகம் மற்றும் இந்துசமய அறநிலையத்துறை செய்து தரவில்லை. பக்தர்களிடம் விதவிதமாக கட்டணம் சுரண்டப்படுகிறது.
அரசு நிர்வாகத்திற்கும் ஒ வ்வொரு மாதமும் பல லட்சம் வருமானம் வருகிறது. ஆனாலும் பக்தர்களுக்கு அடிப்படை வசதி செய்து தரவில்லை. பக்தர்களிடம் தரகர்கள் மூலம் விரைவு தரிசனம் செய்ய பணம் வசூலிப்பதால் பக்தர்கள் வேதனைபடுகின்றனர்.
திருவிழா காலங்களில் கூட அடிப்படை வசதிகளை கூட செய்து தராமல் அலட்சியப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது. பல கோடி வருவாய் வரும் கோவில்களில் கூட தி.மு.க., ஆட்சியில் பக்தர்கள் அவதிப்படுவது தொடர்கிறது.
இந்துக்களின் நலனில் அக்கறை கொண்டு வருங்காலங்களில் மாவட்ட நிர்வாகம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

