/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அணைக்கட்டு, ஆற்றில் குளிக்க தடை : நீர்வளத்துறை எச்சரிக்கை பதாகை
/
அணைக்கட்டு, ஆற்றில் குளிக்க தடை : நீர்வளத்துறை எச்சரிக்கை பதாகை
அணைக்கட்டு, ஆற்றில் குளிக்க தடை : நீர்வளத்துறை எச்சரிக்கை பதாகை
அணைக்கட்டு, ஆற்றில் குளிக்க தடை : நீர்வளத்துறை எச்சரிக்கை பதாகை
ADDED : நவ 06, 2025 05:13 AM

விழுப்புரம்: அணைக்கட்டு மற்றும் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுமக்களின் பார்வைக்காக “எச்சரிக்கை பதாகைகள்” வைக்கப்பட்டுள்ளன.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு;
விழுப்புரம் மாவட்டத்தில் நீர்வளத்துறை கீழ் பெண்ணையாறு வடிநிலக்கோட்ட பராமரிப்பில் வராகநதியில் 1 (வீடூர்) நீர்தேக்கமும், வராகநதி, தொண்டியாறு, நல்லாவூர், ஓங்கூர் ஆகிய ஆற்றில் 36 அணைக்கட்டுகள் உள்ளன. மேலும், வீடூர் நீர்தேக்கம் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் உள்ள திருக்கோவிலுார் அணைக்கட்டு, எல்லீஸ் அணைக்கட்டு, தளவானுார் அணைக்கட்டு, சொர்ணாவூர்அணைக்கட்டுகளில், ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என பொதுமக்களின் பார்வைக்காக “எச்சரிக்கை பதாகைகள்” வைக்கப்பட்டுள்ளன.
தற்போது பருவமழை காலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணைக்கட்டு, நெடிமொழியனுார் அணைக்கட்டு,செவலபுரை அணைக்கட்டுகளில் உபரிநீர் செல்கிறது. பொதுமக்கள் அதிகம் கூடும் அணைக்கட்டு பகுதிகளில் காவல்துறை மூலம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கு அருகில் உள்ள காவல் நிலையங்களில் கோரப்பட்டுள்ளது.
வீடூர் அணைக்கு விடுமுறை நாட்களில் பொது மக்கள் அதிகம் வருவதால், கூடுதல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அணைகட்டுகள் அருகே நீர்வளத்துறை சார்பில் எச்சரிக்கை நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், ஆற்றில் பொதுமக்கள் இறங்காத வகையில் நீர்தேக்கம் மற்றும் அணைக்கட்டுகளில் தொடர் கண்காணிப்பில் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

