/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மக்கள் பணி தொடர நல்வாழ்த்துக்கள்
/
மக்கள் பணி தொடர நல்வாழ்த்துக்கள்
ADDED : செப் 05, 2025 10:50 PM

விழுப்புரம்; பவள விழா காணும் தினமலர் நாளிதழ் மக்கள் சேவை பணி, நூற்றாண்டுகள் தொடர வேண்டும் என்று, தி.மு.க., விழுப்புரம் மத்திய மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., வாழ்த்து தெரிவித்தார்.
அவர் வாழ்த்துச் செய்தி:
தமிழக மக்களுடன் பின்னிப்பிணைந்த தினமலர் நாளிதழ், இன்று 75வது ஆண்டு பவளவிழா காண்பது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
நாட்டில் அன்றாடம் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை மக்களிடையே கொண்டு செல்லும் மகத்தான பணியை தினமலர் நாளிதழ் செய்து வருகிறது.
மக்களின் அடிப்படை பிரச்னைகளை, தேவைகளை அரசின் கவனத்திற்கு அவ்வப்போது கொண்டு வருவதில், தினமலர் நாளிதழ் கொஞ்சமும் சுணக்கம் காட்டுவதில்லை.அன்றாட மக்கள் பிரச்னைகளை சுட்டிக்காட்டுவதையும், அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டுசெல்வதையும் தினமலர் சிறப்பாக செய்கிறது.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி, அனைத்து தரப்பு மக்கள் பிரச்னைகளையும் தீர்ப்பதில் முக்கியத்துவம் கொடுத்து, நடவடிக்கைகளை விரைந்து எடுத்து வருகிறது.
அந்த வகையில், தினமலரில் சுட்டிக்காட்டப்படும் மக்கள் பிரச்னைகள் மீதும், உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுத்து தீர்வு காணப்பட்டு வருகின்றன. தினமலரின் மக்கள் பணி மென்மேலும் தொடர வேண்டும் என்று இந்நாளில் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.