/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
இதழியல் உலகின் ஆலமரமாக 'தினமலர்' பா.ம.க., தலைவர் அன்புமணி வாழ்த்து
/
இதழியல் உலகின் ஆலமரமாக 'தினமலர்' பா.ம.க., தலைவர் அன்புமணி வாழ்த்து
இதழியல் உலகின் ஆலமரமாக 'தினமலர்' பா.ம.க., தலைவர் அன்புமணி வாழ்த்து
இதழியல் உலகின் ஆலமரமாக 'தினமலர்' பா.ம.க., தலைவர் அன்புமணி வாழ்த்து
ADDED : செப் 05, 2025 11:30 PM
விழுப்புரம்: இதழியல் உலகின் ஆலமரமாக 'தினமலர்'நாளிதழ் திகழ்கிறது என பா.ம.க., தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது.
தேசிய நாளிதழ்களில் ஒன்றான 'தினமலர்' பவள விழா ஆண்டான 75ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 'தினமலர்' நாளிதழ் உரிமையாளர்கள், நிர்வாகிகள், ஆசிரியர் குழுவினர், பிற பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்தியா விடுதலை அடைந்த சில ஆண்டுகளில், கன்னியாகுமரி மாவட்டத்தை உள்ளடக்கிய நாஞ்சில் நாடு, கேரளத்துடன் இணைக்கப்படுகின்ற அச்சம் நிலவியது.அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்துடன்,1951ம் ஆண்டு செப்டம்பர் 6ம் நாள், திருவனந்தபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு 'தினமலர்' நாளிதழை,இராம சுப்பையர் துவங்கினார். ஆரம்பத்தில் துவங்கிய 'தினமலர்',சில ஆண்டுகளில் நெல்லையிலிருந்து வெளிவந்தது,தற்போதுதமிழ்நாட்டில் சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நாகர்கோவில், புதுச்சேரி, சேலம், வேலுார், திருச்சி, திருநெல்வேலி ஆகிய 10 நகரங்கள் மட்டுமின்றி, புதுடில்லி, பெங்களூருநகரங்களில் இருந்தும் வெளியாகிறது. அரசின் தவறுகளை சுட்டிக்காட்டுவது, மக்களின் பிரச்னைகளுக்காக குரல் கொடுப்பது, உள்ளூர் நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது என 'தினமலர்' சேவை குறிப்பிடத்தக்கது. பவள விழா காணும் 'தினமலர்' நுாறாண்டுகளைக் கடந்து, இதழியல் உலகின் ஆலமரமாக தழைக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.