/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாரதிதாசன் மணிமண்டபம் எம்.எல்.ஏ., தகவல்
/
பாரதிதாசன் மணிமண்டபம் எம்.எல்.ஏ., தகவல்
ADDED : செப் 21, 2025 11:00 PM

மயிலம்: மயிலம் ஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள் தமிழ் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இளையோர் இலக்கிய பயிற்சிப்பாசறைத் துவக்க விழா நடைபெற்றது.
விழாவிற்கு தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அவ்வை அருள் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு வரவேற்றார். இதில் விக்கிரவாண்டி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா வாழ்த்தி பேசியதாவது:
இன்றைய நிலையில் மாணவர்களிடம் தமிழ் கற்றுக் கொள்வதில் ஆர்வத்தையும், வாசிக்கும் பழக்கத்தையும் ஊக்கப்படுத்த வேண்டும்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதும் தமிழ் வளர்ச்சித்துறை மூலம் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழறிஞர்களுக்கு சிலை அமைத்தல், மணி மண்டபங்கள் மற்றும் தமிழறிஞர்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், கோட்டக்குப்பம் அருகே பாவேந்தர் பாரதிதாசனுக்கு, மணிமண்டபம் அமைப்பதற்கு விரைவில் அடிக்கல் நாட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.