/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாரதிதாசன் நினைவு மண்டபம் முதல்வருக்கு எம்.எல்.ஏ., நன்றி
/
பாரதிதாசன் நினைவு மண்டபம் முதல்வருக்கு எம்.எல்.ஏ., நன்றி
பாரதிதாசன் நினைவு மண்டபம் முதல்வருக்கு எம்.எல்.ஏ., நன்றி
பாரதிதாசன் நினைவு மண்டபம் முதல்வருக்கு எம்.எல்.ஏ., நன்றி
ADDED : ஏப் 26, 2025 04:01 AM

விக்கிரவாண்டி : கோட்டகுப்பத்தில் பாரதிதாசன் நினைவு மண்டபம் கட்டவும், அவரது பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்ததற்கும் முதல்வரை, பாரதிதாசன் குடும்பத்தாருடன் சென்று எம்.எல்.ஏ., நன்றி தெரிவித்தார்.
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா சட்டசபையில் கோரிக்கை வைத்ததன் பேரில், கோட்டக்குப்பத்தில் பாரதிதாசன் நினைவு மண்டபமும் அவரது பிறந்த நாளான ஏப்ரல் 29ம் தேதி முதல் வரும் மே 5ம் தேதி வரை மாநிலம் முழுதும் தமிழ் வார விழாவாக கொண்டாட வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, நேற்று காலை விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ., அன்னியூர் சிவா, பாரதிதாசன் குடும்பத்தாருடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து நினைவு மண்டபம் அமைவதற்கும், தமிழ் வார விழா கொண்டாட உத்தரவிட்டதற்கும் நன்றி தெரிவித்தார்.
தலைமைச் செயலர் முருகானந்தம், பாரதிதாசன் குடும்பத்தார் உடனிருந்தனர்.