/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
சாலை விபத்தில் பைக் எரிந்து சேதம்
/
சாலை விபத்தில் பைக் எரிந்து சேதம்
ADDED : ஜூன் 10, 2025 06:37 AM
விழுப்புரம்,: மயிலம் அடுத்த கேணிப்பட்டு கிராமத்தில் நடந்த சாலை விபத்தில் பைக் எரிந்து சேதம் அடைந்தது.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ஒன்றியத்தில் உள்ள மரக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் மணிவண்ணன், 32; இவர் தனது பைக்கில் சென்னையில் உள்ள சகோதரி வீட்டிற்கு புறப்பட்டார். காலை 5:00 மணிக்கு கேணிப்பட்டு கிராமம் அருகே சென்றபோது, பைக் நிலை தடுமாறி சென்டர் மீடியன் கட்டை மீது மோதியது.
மோதிய வேகத்தில் பைக் தீப்பற்றி எரிந்தது. விபத்தில் மணிவண்ணனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. திண்டிவனம் தீயணைப்பு துறையினர் மற்றும் மயிலம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.
விபத்தில் காயமடைந்த மணிவண்ணனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.