தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இருதரப்பு மோதல் :10 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல் :10 பேர் மீது வழக்கு

இருதரப்பு மோதல் :10 பேர் மீது வழக்கு


UPDATED : செப் 10, 2026 05:34 PM

ADDED : செப் 10, 2026 04:42 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 10, 2026 05:34 PM ADDED : செப் 10, 2026 04:42 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: குப்பை கொட்டிய தகராறில் இருதரப்பை சேர்ந்த 10 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

விழுப்புரம் அடுத்த சேந்தனுாரை சேர்ந்தவர் பிரகாஷ், 42; இவரது தந்தை மணி, 70; என்பவருக்கும், பக்கத்தை வீட்டை சேர்ந்த உறவினர் அய்யனார், 56; என்பவருக்கும் ஒரு செண்ட் வீட்டுமனை தொடர்பாக பிரச்னை இருந்து வருகிறது. அந்த இடத்தில், கடந்த 8ம் தேதி குப்பை கொட்டிய தகாராறில் பிரகாஷ் மற்றும் மணி மனைவி சுதா, 60; தம்பி பிரபு, 39; ஆகியோரை அய்யனார் தரப்பை சேர்ந்த, 5 பேர் சேர்ந்து திட்டி தாக்கினர். தொடர்ந்து, புஷ்பராஜ் மற்றும் அவரது மனைவி சந்தியா, 27; அய்யனார், அவரது மனைவி நாவம்மாள், 53; ஆகியோரை பிரபு தரப்பை சேர்ந்த, 5 பேர் சேர்ந்து திட்டி தாக்கினர்.

இருதரப்பு புகாரின்பேரில், வளவனுார் போலீசார் அய்யனார், பிரபு உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us