ADDED : செப் 10, 2026 04:42 PM
அ நிறம் | அளவு
திண்டிவனம்: மாற்றுத்திறனாளிகளுக்கான குறை கேட்பு முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
திண்டிவனம் அருகே ஜக்காம்பேட்டையிலுள்ள சப்–கலெக்டர் அலுவலகத்தில் நேற்று காலை 11:00 மணியளவில், கோட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான குறை கேட்பு முகாம் நடந்தது.
முகாமில், சப்கலெக்டர் ஆகாஷ் மாற்றுத்திறனாளிகளுடன் குறை கேட்பு மனுக்களை பெற்று, அவர்களிடம் குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
இதில் சப்–கலெக்டரின் நேர்முக உதவியாளர் ராஜன், தாசில்தார்கள் ஞானசவுந்தரி, ஏழுமலை உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த முகாமில் சப்–கலெக்டரிடம், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோர் ஓய்வூதியத்தொகை, மூன்று சக்கர வாகனம், இலவச வீடு என மொத்தம் 69 கோரிக்கை மனுக்கள் மாற்றுத்திறனாளிகள் மூலம் வழங்கப்பட்டன.
