/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அ.தி.மு.க., மாஜி அமைச்சரை சந்தித்த பா.ஜ., நிர்வாகிகள்
/
அ.தி.மு.க., மாஜி அமைச்சரை சந்தித்த பா.ஜ., நிர்வாகிகள்
அ.தி.மு.க., மாஜி அமைச்சரை சந்தித்த பா.ஜ., நிர்வாகிகள்
அ.தி.மு.க., மாஜி அமைச்சரை சந்தித்த பா.ஜ., நிர்வாகிகள்
ADDED : ஜன 01, 2026 06:08 AM

திண்டிவனம்: பா.ஜ.,மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 'தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்' என்ற அடிப்படையில் தமிழகத்திலுள்ள பல இடங்களில் பிரசாரம் செய்து வருகிறார்.
இதேபோல், திண்டிவனத்தில் வரும் 3ம் தேதி நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்க உள்ளார்.
பொதுக்கூட்டம் நடைபெறுவதை முன்னிட்டு, கூட்டணி கட்சியான அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகத்தை, பா.ஜ., மாநில செயலாளர் முரளிரகுராமன் திண்டிவனத்தில் சந்தித்து கூட்டத்தில் பங்கேற்பதற்கு அழைப்பு விடுத்தனர்.
இதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் விநாயகம், எஸ்.ஐ.ஆர். கோட்ட பொறுப்பாளர் எத்திராஜ், வழக்கறிஞர்கள் செந்தில், ராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.