/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
புதிய ரேஷன் கடை கட்டடம் எம்.எல்.ஏ., திறப்பு
/
புதிய ரேஷன் கடை கட்டடம் எம்.எல்.ஏ., திறப்பு
ADDED : ஜன 01, 2026 06:09 AM

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அருகே புதிய ரேஷன் கடை கட்டடத்தை மஸ்தான் எம்.எல்.ஏ., திறந்து வைத்தார்.
மேல்மலையனுார் அடுத்த செக்கடிக்குப்பம் கிராமத்தில் செஞ்சி எம்.எல்.ஏ., மேம்பாட்டு திட்டத்தில் ரூ.8.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக ரேஷன் கடை கட்டடம் கட்டப்பட்டது.
ரேஷன் கடை திறப்பு விழாவிற்கு ஒன்றிய சேர்மன் கண்மணிநெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சரவணன் வரவேற்றார்.
மஸ்தான் எம்.எல்.ஏ., புதிய ரேஷன் கடை கட்டடத்தை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு பொருட்களை வழங்கினார்.
இதில் ஒன்றிய துணை சேர்மன் விஜயலட்சுமி, ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், பி.டி.ஓ., ஜெய்சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

