/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா . ஜ ., கட்சியினர் த . வெ . க ., வில் ஐக்கியம்
/
பா . ஜ ., கட்சியினர் த . வெ . க ., வில் ஐக்கியம்
ADDED : செப் 16, 2025 06:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரத்தைச் சேர்ந்த பா.ஜ.,வினர் அக்கட்சியில் இருந்து விலகி த.வெ.க.,வில் இணைந்தனர்.
விழுப்புரம் தெற்கு மாவட்ட த.வெ.க., அலுவலகத்தில் மாற்றுக் கட்சியினர் இணையும் நிகழ்ச்சி நடந்து. அதில், பா.ஜ., முன்னாள் மாவட்ட செயலாளர் சேகர் தலைமையில் பா.ஜ., இளைஞரணி முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், மனித உரிமை கட்சி முன்னாள் மாவட்ட செயலாளர் தனசீலன் உட்பட பலர் அக்கட்சியில் இருந்து விலகி த.வெ.க., மாவட்ட செயலாளர் மோகன் முன்னிலையில் த.வெ.க.,வில் இணைந்தனர்.