/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ஜ., ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஆலோசனை
/
பா.ஜ., ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஆலோசனை
ADDED : நவ 10, 2025 03:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனத்தில் பா.ஜ., சார்பில் ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, பா.ஜ., மாவட்ட தலைவர் விநாயகம் தலைமை தாங்கி பேசினார். திண்டிவனம் தொகுதி தேர்தல் இணை பொறுப்பாளர் எத்திராஜ், தேர்தல் அமைப்பாளர் சந்திரலேகா பிரபாகரன் ஆகியோர் பேசினர்.
கூட்டத்தில், மாவட்ட துணைத் தலைவர் சத்தியநாராயணன், பிரசார பிரிவு செயலாளர் தினேஷ்குமார், மாவட்ட செயலாளர்கள் முருகபெருமாள், முருகன், இளைஞரணி பிரபு, மகளிர் அணி செல்வி, மண்டல தலைவர்கள் சுந்தர், காளியம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

