/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
திண்டிவனத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
/
திண்டிவனத்தில் பா.ஜ., ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 06, 2025 06:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: திண்டிவனத்தில் பா.ஜ., வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் கோவிலில் தீபம் ஏற்றுவது தொடர்பாக, கோர்ட் உத்தரவை மதிக்காத அரசு நிர்வாகத்தை கண்டித்து, பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அப்பகுதிக்கு சென்றபோது போலீசார் அவரை கைது செய்தனர். இதனை கண்டித்து, திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரே, நேற்று முன்தினம் இரவு பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பொதுச் செயலாளர் முரளி ரகுராமன், தொகுதி ஒருங்கிணைப்பாளர் எத்திராஜ், நிர்வாகிகள் வழக்கறிஞர் செந்தில், முருகன், தினேஷ்குமார், பிரபு, ராதிகா உட்பட பலர் பங்கேற்றனர்.

