
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: பஹல்காம் தாக்குதலை கண்டித்து, விழுப்புரத்தில் தெற்கு மாவட்ட பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் தர்மராஜ் தலைமை தாங்கினார். மாநில ஓ.பி.சி., அணி தலைவர் சாய் சுரேஷ், முன்னாள் எம்.எல்.ஏ., கலிவரதன் கண்டன உரையாற்றினர். காஷ்மீர், பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் மற்றும் பாகிஸ்தானை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.