ADDED : செப் 22, 2024 02:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரத்தில் பா.ஜ., தெற்கு மாவட்ட இளைஞரணி சார்பில், பிரதமர் மோடி பிறந்த நாளையொட்டி ரத்த தான முகாம் நடந்தது.
பா.ஜ., அலுவலகத்தில் நடந்த முகாமிற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். ரத்ததான முகாமை மாவட்ட தலைவர் கலிவரதன் தொடங்கி வைத்தார். 75 பேர் ரத்த தானம் வழங்கினர்.
மாநில செயற்குழு தியாகராஜன், மாநில பொதுக்குழு சுகுமார், மாவட்ட பொதுச் செயலாளர் சதாசிவம், செயலாளர் குபேரன், இளைஞரணி பார்வையாளர் திருமால், இளைஞரணி பொதுச்செயலாளர் சிலம்பரசன் முன்னிலை வகித்தனர். நகர தலைவர் விஜயன், நகர துணைத் தலைவர் யுவராஜ், நகர பொது செயலாளர்கள் குமரகுருபரன், பிரேம்நாத், இளைஞரணி தேவா, பிரசாந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.