ADDED : மார் 16, 2024 11:25 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: போதை பொருட்களுக்கு எதிராகவும், குடியுரிமைச் சட்டத்தை விளக்கியும் செஞ்சியில் பா.ஜ., சார்பில் தெருமுனை பிரசாரம் நடந்தது.
செஞ்சி கிழக்கு ஒன்றிய தலைவர் தங்க ராமு தலைமை தாங்கினார். தொகுதி அமைப்பாளர் கோபிநாத், இணை அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் விஜயலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் மேகலா, மாவட்ட மகளிர் அணி பொதுச் செயலாளர் ஞானமணி, அரசு தொடர்பு பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.
பிரசாரத்தில் போதைப் பொருட்களை ஒழிக்கத் தவறிய தமிழக அரசை கண்டித்தும், மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டத்தை விளக்கியும் பொதுமக்களிடம் பிரசாரம் செய்தனர்.

