ADDED : நவ 16, 2025 11:38 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: பீகாரில் பா.ஜ.,ஆட்சியை பிடித்ததையொட்டி, திண்டிவனத்தில் பா.ஜ.,வினர் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
பீகாரில் நடந்த சட்ட சபை தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சியை பிடித்தனர். இதையொட்டி, விழுப்புரம் மாவட்ட பா.ஜ.,.இளைஞரணி சார்பில் திண்டிவனம் நேரு வீதியில் பட்டாசு வெடித்து, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில் விழுப்புரம் மாவட்ட பா.ஜ.,தலைவர் விநாயகம், முன்னாள் வர்த்தகர் அணி ஜின்ராஜ், மாவட்ட துணை தலைவர் எத்திராஜ், மாவட்ட இளைஞரணி அணி தலைவர் பிரபு, மாவட்ட நிர்வாகிகள் முருகப்பெருமாள், அய்யப்பன், ராஜா, மணிகண்டன், முருகன், செயற்குழு உறுப்பினர் ராதிகா, வழக்கறிஞர் ராஜா, சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

