/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
குடிநீர் பிரச்னை தீர்க்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை
/
குடிநீர் பிரச்னை தீர்க்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை
குடிநீர் பிரச்னை தீர்க்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை
குடிநீர் பிரச்னை தீர்க்க வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை
ADDED : நவ 04, 2025 01:16 AM

விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த கீழ்எடையாளம் கிராமத்தினர், குடிநீர் பிரச்னையை தீர்க்க வலியுறுத்தி, விழுப்புரம் கலெக்டர் அலுவலகம் முன் திரண்டு முற்றுகையிட்டனர்.
அப்போது அவர்கள் கூறியதாவது:
கீழ்எடையாளம் கிராம மக்கள் 100க்கும் மேற்பட்டோர் நேற்று கலெக்டர் அலுவலகம் முன் திடீரென முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கிராம மக்களை சமாதானப்படுத்தி, கலெக்டரிடம் மனு அளிக்கும் படி தெரிவித்து, அனுப்பி வைத்தனர்.
அதன் பின் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் அளித்தி மனு விபரம்:
கீழ்அடையாளம் கிராமத்தில் 500 குடும்பத்தினர் வசித்து வருகிறோம். எங்கள் குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. போதிய மினி டேங்க், ஆழ்துளை கிணறுகளும் அமைக்காமல் உள்ளனர். ஊராட்சி தலைவரிடம் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை.
குறிப்பாக அம்மன் நகர், முருகா நகர், கணபதி நகர், சரவணா நகர், சிவஜோதி நகர் என விரிவாக்கம் அடைந்தும், குடிநீர் வசதி செய்து தரவில்லை. ஊராட்சிக்கு வரி செலுத்தியும், வெளியிலிருந்து குடிநீர் பிடித்து வருகிறோம்.
மேலும், இப்பகுதியில் தனி நபர்கள், ராட்சத கிணறு வெட்டி, குடிநீர் சுத்திகரிப்பு ஆலை திறந்து, தினசரி நிலத்தடி நீரை உறிஞ்சி விற்பனை செய்து வருகின்றனர். இதனால், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அனுமதியின்றி இயங்கும் குடிநீர் சுத்திகிரப்பு ஆலையை மூடி, குடிநீர் பிரச்னை தீர்க்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

