ADDED : ஜன 12, 2025 04:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம் : விழுப்புரம் ஜானகிபுரத்தில் உள்ள வின்னர் பயிற்சி மையத்தில் ரத்த தான சிறப்பு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, வின்னர் பயிற்சி மைய நிறுவனர் ராமராஜா முன்னிலை வகித்தார். டாக்டர் விவேகானந்தன், முகாமை துவக்கி வைத்தார். ஏற்பாடுகளை முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர் விஜயலட்சுமி தலைமையிலான குழுவினர், கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தினர் செய்திருந்தனர்.
இதே முகாமில், விழுப்புரம் அரசு மருத்துவமனை டாக்டர் ஆனந்து தலைமையில், மாணவர்களுக்கான முழு உடல் பரிசோதனை மற்றும் ஆலோசனை வழங்கினர்.