ADDED : ஜூலை 10, 2025 09:41 PM

விக்கிரவாண்டி; விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ரத்த கொடையாளர் தின விழா நடந்தது.
முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, திண்டிவனம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, கூடுதல் கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கி ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் மற்றும் நினைவு பரிசு வழங்கி பாராட்டி பேசினார். முன்னதாக கல்லுாரி டீன் கீதாஞ்சலி வரவேற்றார்.
மாவட்ட மேற்பார்வையாளர் பிரேமா ரத்ததான உறுதி மொழி படித்தார்.
மாவட்ட தொற்றா நோய் பிரிவு திட்ட அலுவலர் விவேகானந்தன், மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் ரமேஷ் பாபு, ரத்த வங்கி துறை தலைவர் சுப்பலட்சுமி, இணை பேராசிரியர் நித்யா, ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் பார்த்தசாரதி, ரத்த வங்கி டாக்டர் விஜயா, ஒருங்கிணைப்பாளர் அசோக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.