/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நீலக்கொடி கடற்கரை பணி துவக்கம்
/
நீலக்கொடி கடற்கரை பணி துவக்கம்
ADDED : மார் 02, 2026 03:31 AM
மரக்காணம்: கீழ் புத்துப்பட்டில் நீலக்கொடி கடற்கரை பணி துவக்க விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மரக்காணம் அருகே உள்ள கீழ் புத்துப்பட்டில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை நிதி திட்டத்தின் கீழ் ரூ. 4 கோடி மதிப்பீட்டில் நீலக்கொடி கடற்கரை பணி துவக்க விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கூடுதல் கலெக்டர் பத்மஜா தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மஸ்தான் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பணியை துவக்கிவைத்தார்.
சேர்மன் தயாளன், வடக்கு மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், துணை சேர்மன் பழனி, மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் சந்தானகிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் புஷ்பவல்லி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

