/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பா.ம.க., தலைவர் பிறந்த நாள் விழா திண்டிவனத்தில் இனிப்பு வழங்கல்
/
பா.ம.க., தலைவர் பிறந்த நாள் விழா திண்டிவனத்தில் இனிப்பு வழங்கல்
பா.ம.க., தலைவர் பிறந்த நாள் விழா திண்டிவனத்தில் இனிப்பு வழங்கல்
பா.ம.க., தலைவர் பிறந்த நாள் விழா திண்டிவனத்தில் இனிப்பு வழங்கல்
ADDED : அக் 10, 2024 04:11 AM

திண்டிவனம்: பா.ம.க.,மாநில தலைவர் பிறந்த நாளை முன்னிட்டு, திண்டிவனத்தில் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
திண்டிவனம் தாலுகா அலுவலகம் எதிரில், பா.ம.க.,மாநில தலைவர் அன்புமணியின் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது.
விழுப்புரம் மாவட்ட பா.ம.க., துணை செயலாளர் பால்பாண்டியன்ரமேஷ் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில், பட்டாளி சமூக ஊடக பேரவை மாநில செயலாளர் முகுந்தன் பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார்.
இதில் மாவட்ட செயலாளர் ஜெயராஜ், சமூக நீதி பேரவை மாநில செயலாளர் பாலாஜி, நகர செயலாளர் மணிகண்டன், முன்னாள் நகர செயலாளர்கள் சண்முகம், ராஜேஷ், மாவட்ட சிறுபான்மை பிரிவு பிச்சைமுகமது, மாவட்ட துணை தலைவர் பொன்மொழி, முன்னாள் கவுன்சிலர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.