/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆற்றில் மூழ்கிய சிறுவனின் உடல் மீட்பு
/
ஆற்றில் மூழ்கிய சிறுவனின் உடல் மீட்பு
ADDED : ஜன 02, 2025 07:15 AM
திருக்கோவிலுார்; தென்பெண்ணை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் உடல் நெற்குணம் அருகே மீட்கப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லுார், அண்ணா நகரை சேர்ந்தவர் முருகன் மகன் கோபி, 45; எலக்ட்ரிக்கல் கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மதியம் வீட்டுக்கு விருந்தினராக வந்திருந்த திருவண்ணாமலை, ராகவேந்திரர் நகரை சேர்ந்த ஜீவா மகன் யோகேஷ், 17; வெற்றிவேல், 16; மற்றும் குடும்பத்தினருடன் ஆற்றில் குளித்தனர்.
அப்போது, வெற்றிவேல், யோகேஷ் இருவரும் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டனர். உடன் கோபி ஆற்றில் குதித்து வெற்றிவேலை காப்பாற்றி கரையில் சேர்த்து விட்டு, யோகேஷை மீட்க முயன்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார்.
பொதுமக்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் கோபியின் உடலை மீட்டனர். மாயமான யோகேஷை தொடர்ந்து தேடிவந்தனர். நேற்று காலை 8:00 மணி அளவில் நெற்குணம், அய்யனார் கோவில் அருகே யோகேஷின் உடல் கரை ஒதுங்கியதை கண்டறிந்தனர். யோகேஷின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

