/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பள்ளி மாணவர் எழுதிய நுால் வெளியீட்டு விழா
/
பள்ளி மாணவர் எழுதிய நுால் வெளியீட்டு விழா
ADDED : ஆக 22, 2025 10:10 PM

கண்டாச்சிபுரம் : விழுப்புரம் அருகே, 10 வகுப்பு மாணவர் ஜெயராஜ்குமார் எழுதிய நுால் வெளியீட்டு விழா நடைபெற்றது.
விழுப்புரம், சேக்ரட் ஹார்ட் ஆங்கிலோ-இந்தியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர், ஜெயராஜ்குமார்.
இவர் தனது பள்ளித் தலைமை ஆசிரியர் அருள்மேரி குறித்து 'ஒளிவீசும் ஒற்றைக் கதிர் எங்கள் தலைமை ஆசிரியை அருட்சகோதரி மங்கள மேரி அம்மா' என்ற தலைப்பில் நுால் எழுதியிருந்தார்.
இதன் வெளியீட்டு விழா, பாணாம்பட்டு, கோணங்கிபாளையம், கிருபாலயா அருட்சகோதரிகள் நிறுவனத்தில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு ஓய்வுபெற்ற சி.இ.ஓ ராஜசேகர் தலைமை வகித்தார். முன்னாள் கோலியனுார், ஒன்றிய சேர்மன் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தார். ரவி வரவேற்றார்.
பழனிவேலு கல்வி நிறுவன தலைவர் ராஜேந்திரன் விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்தார். புதுச்சேரி தமிழறிஞர் சுந்தர முருகன் புத்தகத்தை வெளியிட்டார். டாக்டர் மூர்த்தி, வி.ஆர்.பி பள்ளி தாளாளர் சோழன் ஆகியோர் புத்தகத்தை பெற்றுக்கொண்டனர்.
பானாம்பட்டு ஐ.சி.எஸ்.சி., பள்ளி தாளாளர் குளோரியா, கிருபாலயா தலைவர் சரளா ஆகியோர் நுாலாசிரியர் ஜெயராஜ்குமாரை வாழ்த்தி பேசினர்.
முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் ஜனசக்தி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
ஏழுமலை பாலிடெக்னிக் முதல்வர் காமோஸ் ராபர்ட் ஜெயச்சந்திரன், ஓய்வுபெற்ற வேளாண் இணை இயக்குனர் இளவரசன், ராமதாஸ், நடராஜ் ஐ.டி.ஐ., தாளாளர் ஜெயச்சந்திரன், ஓய்வுபெற்ற கல்வி அலுவலர் ஜெகதீசன், கீதா விருத்தகிரி, பழனிவேலு கல்வி நிறுவனத் தாளாளர் ஜெகதீசன், ஐ.சி.ஐ.சி., பள்ளி முதல்வர் மரியா ஆகியோர் பேசினர்.
அருட்சகோதரி மங்களமேரி ஏற்புரை வழங்கினார். கண்டமங்கலம் வட்டார மேலாண்மை தொழில்நுட்ப மேலாளர் தேன்மொழி நன்றி கூறினார்.
இதில் விழுப்புரம்,கண்டாச்சிபுரம் பகுதியில் இருந்து திரளான வாசகர்கள் கலந்துகொண்டனர்.