ADDED : அக் 02, 2024 01:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : கிளியனுார் அருகே பைக்கில் மது பாட்டில்களைக் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.
பிரம்மதேசம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கிளியனுாா் எல்லைக்குட்பட்ட பகுதியில் பேஷன் ப்ரோ ைபக்கில் வந்த நபரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் அவர் பையில், புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. விசாரணையில், தென்கோடிப்பாக்கம் கார்த்திகேயன், 38; என்பதும், புதுச்சேரியில் இருந்து 90 குவார்ட்டர் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. பிடிபட்ட இடம் கிளியனுார் என்பதால் பிரம்மதேசம் போலீசார், கிளியனுார் போலீசில் ஒப்படைத்தனர் போலீசார் வழக்கு பதிந்து, கார்த்திகேயனை கைது செய்தனர்.