/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஆஞ்சநேயர் சிலை பற்றி அவதுாறாக பேசிய சிறுவன் கைது
/
ஆஞ்சநேயர் சிலை பற்றி அவதுாறாக பேசிய சிறுவன் கைது
ADDED : ஆக 22, 2025 03:53 AM
விழுப்புரம்:ஆஞ்சநேயர் சிலையை அவதுாறாக பேசிய சிறுவனை போலீசார் கைது செய்து, அவரது அண்ணனை தேடிவருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த அருளவாடி ஆற்றங்கரையில் ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள ஆஞ்சநேயர் சிலை முன் கடந்த 15ம் தேதி அதே பகுதியை சேர்ந்த பிரகாஷ் மகன்களான ஆகாஷ், 22; மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் வீடியோ எடுத்துள்ளனர்.
அதில், 17 வயது சிறுவன், சுவாமி சிலையை பார்த்து அவதுாறாக பேசியும், ஆகாஷ் அதை வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.
பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையிலும், மத நம்பிக்கையை புண்படுத்தும் வகையிலும் வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளதாக கோவில் தர்மகர்த்தா கலிவரதன் அளித்த புகாரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து, 17 வயது சிறுவனை கைது செய்து, தலைமறைவாக உள்ள ஆகாைஷ தேடி வருகின்றனர்.