/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பஸ் நிலைய பயணியிடம் திருட்டு: சிறுவன் கைது
/
பஸ் நிலைய பயணியிடம் திருட்டு: சிறுவன் கைது
ADDED : அக் 29, 2025 07:52 AM
விழுப்புரம்: விழுப்புரம் பஸ் நிலையத்தில் துாங்கிய பயணியிடம் 1,000 ரூபாயை திருடி, கத்தியால் தாக்கிய சிறுவனை போலீசார் கைது செய்தனர்.
செஞ்சி அடுத்த கெங்கவரத்தைச் சேர்ந்தவர் சங்கர், 45; முன்னாள் ராணுவ வீரர்.
வெளியறை சென்று திரும்பிய இவர், நேற்று முன்தினம் அதிகாலை 2:00 மணிக்கு விழுப்புரம் புதிய பஸ் நிலையத்திற்கு வந்தார்.
பஸ் இல்லாததால், பஸ் நிலையத்தில் ஓரமாக துாங்கினார். அப்போது அங்கு வந்த 17 வயது சிறுவன், அவரது பேண்ட் பாக்கெட்டிலிருந்து 1,000 ரூபாயை திருடினான். திடுக்கிட்டு எழுந்த சங்கரை அந்த சிறுவன் கத்தியால் தாக்கி விட்டு தப்பியோடினார்.
இது குறித்து, சங்கர் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து, அந்த சிறுவனை கைது செய்தனர்.

