ADDED : ஏப் 12, 2025 05:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே கிணற்றில் குளித்த பள்ளி சிறுவன் நீரில் மூழ்கி இறந்தார்.
முண்டியம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பாபு. கட்டட தொழிலாளி. இவரது மகன் பாலாஜி, 14; பனையபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். பள்ளியில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதால் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு மதியம் வகுப்புகள் நடந்தது.
நேற்று வீட்டில் இருந்து புறப்பட்ட பாலாஜி, பள்ளிக்கு செல்லாமல் தனது நண்பர்களுடன் வடகுச்சிபாளையம் பகுதியிலுள்ள விவசாய கிணற்றில் மதியம் 3:30 மணிக்கு குளித்தார். அப்போது நீரில் மூழ்கி பாலாஜி இறந்தார்.
தகவலறிந்து வந்த விக்கிரவாண்டி தீயணைப்பு நிலையத்தினர் கிணற்றில் மூழ்கி இறந்த பாலாஜி உடலை மீட்டனர். விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.