ADDED : ஜன 03, 2026 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார்: வானுார் அருகே பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை இறந்தது.
திருவக்கரை அருகே உள்ள நெமிலி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் மகன் ருத்தீஷ்குமார், 2; குழந்தை நேற்று மாலை வீட்டின் எதிரே விளையாடிக் கொண்டிருந்தது. 5:00 மணியளவில் அந்த வழியாக சென்ற தனியார் பள்ளி வேன் மாணவர்களை இறக்கி விட்டு மீண்டும் டிரைவர் வேனை எடுத்துள்ளார்.
அப்போது அங்கு விளையாடிக் கொண்டிருந்த ருத்தீஷ்குமார் மீது வேன் மோதியதில் படுகாயமடைந்த குழந்தையை மீட்டு வானுார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
அங்கு ருத்தீஷ்குமாரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தார்.
வானுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

