/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைக் மீது லாரி மோதல் வாலிபர் பலி: மூவர் படுகாயம்
/
பைக் மீது லாரி மோதல் வாலிபர் பலி: மூவர் படுகாயம்
ADDED : ஜன 20, 2024 06:23 AM
செஞ்சி: பைக் மீது லாரி மோதியதில் வாலிபர் இறந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
செஞ்சி அடுத்த சிறுநாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ் மகன் அனீஸ், 22; பிளம்பர். இவர், நேற்று மாலை அதே ஊரை சேர்ந்த தனது நண்பர்களான விஷ்வா. 23; வீரா, 20; சாலமன், 22; ஆகியோருடன் ஒரே பைக்கில் செஞ்சிக்கு சென்று கொண்டிருந்தார்.
பைக்கை அனீஸ் ஓட்டினார். 4:30 மணிக்கு அப்பம்பட்டு கடை வீதியில் முன்னே சென்ற ஆட்டோவை முந்திச் செல்ல முயன்ற போது, எதிரே வந்த லாரி பைக் மீது மோதியது.
இதில், லாரி சக்கரத்தில் சிக்கி அனீஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயம் அடைந்த 3 பேரும் செஞ்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு ஆபத்தான நிலையில் இருந்த விஷ்வா மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
விபத்து குறித்து அனந்தபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.