/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கைலாசநாதர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
/
கைலாசநாதர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்
ADDED : மே 11, 2025 11:43 PM

விழுப்புரம்: விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில், பிரம்மோற்சவ தேரோட்டம் நடந்தது.
விழாவையொட்டி, கடந்த 3ம் தேதி காலை 7:00 மணிக்குமேல் கொடியேற்றம், இரவு பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது. 4ம் தேதி காலை திருஞானசம்பந்தர் திருமுலைபால் உற்சவம், இரவு சூரிய பிரபை நடந்தது. தொடர்ந்து 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை காலையில் பல்லக்கு, இரவு அதிகாரநந்தி சேவை, நாக வாகனம், பஞ்சமூர்த்திகள், ரிஷப வாகனம், யானை வாகனம், மாவடி சேவை நடந்தது.
10ம் தேதி காலை பல்லக்கு, இரவு திருக்கல்யாணம், பஞ்சமூர்த்திகள குதிரை வாகனம் வீதியுலா நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை 7:00 மணியளவில் தேரோட்டம் மற்றும் 63 நாயன்மார்கள் உற்சவம் நடந்தது.
இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.