/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
கைலாசநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழா
/
கைலாசநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழா
ADDED : ஏப் 29, 2025 04:35 AM

விழுப்புரம்: விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழா வரும் மே 2ம் தேதி துவங்குகிறது.
விழுப்புரம் பிரஹன்நாயகி உடனுறை கைலாசநாதர் கோவிலில் பிரம்மோற்சவ விழா வரும் மே 2ம் தேதி மாலை 6.00 மணிக்கு பிடாரி உற்சவம், விநாயகர் உற்சவத்தோடு துவங்குகிறது. 3ம் தேதி காலை 7:00 மணிக்கு கொடியேற்றம், பஞ்சமூர்த்தி வழிபாடு நடக்கிறது. பின், தினந்தோறும் சுவாமி பல்லக்கில் வீதியுலா நடக்கிறது.
அதைத் தொடர்ந்து, 11ம் தேதி காலை 7.00 மணிக்கு திருத்தேர் உற்சவம் நடக்கிறது. 12ம் தேதி நடராஜர் உற்சவம் தீர்த்தவாரி, 18 ம் தேதி பஞ்சமூர்த்தி அபிஷேகம், விடையாற்றி உற்சவம் நடக்கிறது. பிரம்மோற்சவத்தையொட்டி, விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் நேற்று முன்தினம் பந்தல் கால் நடும் நிகழ்ச்சி நடந்தது.
விழா ஏற்பாடுகளை பிரதோஷ பேரவை தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழு தலைவர் சிவக்குமார், அறங்காவலர்கள் கலைசெல்வி சந்தோஷ், ரவிச்சந்திரன், ஆலய அர்ச்சகர் ரஞ்சித் (எ) கனகசபாபதி ஆகியோர் செய்து வருகின்றனர்.