
செஞ்சி: செஞ்சியில் காலை உணவு திட்டத்தை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
தமிழகம் முழுவதும் நகர பகுதியில் நிதி உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் நேற்று முன்தினம் துவங்கப்பட்டது.
செஞ்சியில் கிருஷ்ணாபுரம் ஆர்.சி., துவக்க பள்ளி, பீரங்கிமேடு நிதி உதவி பெறும் துவக்க பள்ளி, விழுப்புரம் ரோடு எம்.டி., துவக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்க விழா நடந்தது.
பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
தலைமையாசிரியர்கள் சுசானாள், கமலா, கிளாடிஸ் தேவபிரியா ஆகியோர் வரவேற்றனர்.
மஸ்தான் எம்.எல்.ஏ., மாணவர்களுக்கு காலை உணவு வழங்குவதை துவக்கி வைத்தார்.
இதில் வல்லம் ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், பி.டி.ஓ., க்கள் நடராஜன், பிரபாசங்கர், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பங்கு தந்தைகள் அந்தோணி ரோச், ஜான் சத்திய கிருபைநாதன், சாக்கரடீஸ் விஜயகுமார், பேரூராட்சி துணை தலைவர் ராஜலட்சுமி செயல்மணி, வட்டார கல்வி அலுவலர் வெங்கடேசன் மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.