/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
அரசு உதவிபெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்
/
அரசு உதவிபெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்
அரசு உதவிபெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்
அரசு உதவிபெறும் பள்ளியில் காலை உணவு திட்டம் துவக்கம்
ADDED : ஆக 26, 2025 11:49 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு உதவிபெறும் பள்ளியில், முதல்வரின் காலை உணவு விரிவாக்க தி ட்டம் துவங்கப்பட்டது.
முதல்வர் ஸ்டாலின், சென்னை மயிலாப்பூரில் தமிழகத்தில் நகர் பகுதி அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு காலை உணவுத் திட்டத்தை துவக்கி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் நடராஜா அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கினார்.
லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். தமிழக சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை, திட்டத்தை துவக்கி வைத்தார்.இத்திட்டத்தின் கீழ், விழுப்புரம் நகராட்சி -10; திண்டிவனம் நகராட்சி-11; கோட்டக்குப்பம் நகராட்சி - 1 பள்ளி; வளவனுார் பேரூராட்சி - 1; மரக்காணம் பேரூராட்சி - 1; செஞ்சி பேரூராட்சி - 3; என மொத்தம் 27 அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 3,362 மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படவுள்ளது.
அப்போது, மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், நகராட்சி கமிஷனர் வசந்தி நகர்மன்ற சேர்மன் தமிழ்ச் செல்வி பிரபு, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.