ADDED : டிச 01, 2025 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: கோவில் உண்டியலை உடைத்து காணிக்கையை திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திண்டிவனம் அடுத்த பெலாக்குப்பம் குளக்கரையில் பாலமுருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் உண்டியலை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் உடைத்து காணிக்கை பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
புகாரின் பேரில், ரோஷணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

