/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு
/
மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு
ADDED : அக் 12, 2025 04:25 AM
விக்கிரவாண்டி : மருத்துவமனை வளாகத்தில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பிங்க் நிற குடை தொங்க விடப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக கடை பிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தற்போது விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், 'பிங்க்' நிற குடைகளை கட்டி, விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில் கல்லுாரி டீன் ரோசி நிர்மல் மெடோனா தலைமையில் அறுவை சிகிச்சை துறை தலைவர் கணேஷ்குமார், புற்று நோய் சிகிச்சை துறை தலைவர் ராஜிவ்குமார், டாக்டர் தேவி ஸ்ரீ மற்றும் மருத்துவ குழுவினர், பெண்களிடம் மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும் தாமதமின்றி பரிசோதனை செய்து நோயை ஆரம்பத்திலேயே கண்டறியும் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடையே பிரசாரம் செய்தனர் .
நிகழ்ச்சியில், ஆர்.எம்.ஓ., ரவிக்குமார், மருத்துவ கண்காணிப்பாளர் பார்த்தசாரதி, துணை முதல்வர் தாரணி, அனைத்து துறை தலைவர்கள், டாக்டர்கள், செவிலியர்கள் அனைவரும் பிங்க் நிற ரிப்பன் அணிந்து பங்கேற்றனர்.