/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
/
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 12, 2025 04:29 AM

விழுப்புரம் : தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
விழுப்புரம் நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் கலியமூர்த்தி தலைமை தாங்கினார். வட்ட நிர்வாகிகள் மதியழகன், சின்னசாமி, சரவணன், குப்புசாமி, ஜெசிந்தா மேரி, எட்டியான், பரமசிவம், ஆனந்தன், பூங்காவனம், மாலினி, சீனுவாசன், பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் சரவண பாண்டியன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். ஓய்வூதியர்களின் நீண்ட கால கோரிக்கைகள் அனைத்தையும் நிறைவேற்றிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மாவட்ட நிர்வாகிகள் நெடுமாறன், உமாச்சந்திரன், சதாசிவம், சாம்பமூர்த்தி, முனுசாமி, தட்சணாமூர்த்தி, துரைராஜ், ராஜேந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.