
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம், : விழுப்புரம் அடுத்த கண்டமானடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக தாய்ப்பால் தின விழா கொண்டாடப்பட்டது.
விழாவிற்கு கோலியனுார் வட்டார மருத்துவ அலுவலர் பிரியாபத்மாசினி தலைமை தாங்கினார். பொது சுகாதார நிபுணர் நிஷாந்த் தாய்ப்பால் அவசியம் குறித்து விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில் 119 கர்ப்பிணிகளுக்கு 2000 ரூபாய் மதிப்பிலான சத்துணவு பெட்டகங்கள் வழங்கப்பட்டது.
மறைந்த முன்னாள் தி.மு.க., எம்.எல்.ஏ., புகழேந்தியின் பிறந்த நாளை முன்னிட்டு, அவர்களது குடும்பத்தினர் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
தி.மு.க., பொறியாளர் அணி அமைப்பாளர் செல்வகுமார், பிசியோதெரபிஸ்ட் மருத்துவர் பிரசன்னாதேவி, செவிலியர்கள் ஷாமிளா, தேவசேனா, மயில்விழி, லட்சுமி, பிரியா மற்றும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் பங்கேற்றனர்.