/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் விழுப்புரத்தில் காத்திருப்பு போராட்டம்

ADDED : ஆக 20, 2025 02:59 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் அரசு போக்குவரத்துக்கழக தொழிலாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அரசு போக்குவரத்துக் கழக தலைமை அலுவலகம் முன் நடந்த போராட்டத்திற்கு, மண்டல தலைவர் ராஜாராம் தலைமை தாங்கினார்.
சி.ஐ.டி.யூ., மாவட்ட துணைத் தலைவர் ஏழுமலை வரவேற்றார். செயலாளர் மூர்த்தி துவக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர்கள் வேலு, துணைத் தலைவர்கள் ரகோத்தமன் தெய்வீகன், துணை பொதுச் செயலாளர் காளிதாஸ், துணைச் செயலாளர் நாகராஜன், மண்டல பொருளாளர் முருகன், ஓய்வு பெற்றோர் நலச் சங்க பொதுச் செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினார். நிர்வாகிகள், சங்கத்தினர் பலர் பங்கேற்றனர்.
போராட்டத்தில், தி.மு.க., தேர்தல் வாக்குறுதிபடி போக்குவரத்து ஊழியர்கள் அனைவருக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 25 மாதங்களாக நிலுவையில் உள்ள ஓய்வூகால பண பலன்களை வழங்க வேண்டும்.
ஓய்வுபெறும் நாளன்றே ஓய்வுகால பணப் பலன்களை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.