/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வயிற்று வலியால் கொத்தனார் தற்கொலை
/
வயிற்று வலியால் கொத்தனார் தற்கொலை
ADDED : நவ 23, 2024 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வானுார் : கிளியனுார் அருகே தீராத வயிற்று வலியால் ஒருவர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிளியனுார் அடுத்த டி.பரங்கனி மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் பாண்டுரங்கன், 53; கொத்தனார். இவருக்கு, கடந்த ஒரு ஆண்டுக்கு முன் மருத்துவமனையில் பித்தப்பை அறுவை சிகிச்சை நடந்தது. அப்போது முதல் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.
இதனால், மனமுடைந்த அவர், நேற்று முன்தினம் வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிளியனுார் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.