/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பாலம் கட்டும் பணி நிறுத்தம் வெள்ளத்தால் சாலை துண்டிப்பு கிராம மக்கள் கடும் அவதி
/
பாலம் கட்டும் பணி நிறுத்தம் வெள்ளத்தால் சாலை துண்டிப்பு கிராம மக்கள் கடும் அவதி
பாலம் கட்டும் பணி நிறுத்தம் வெள்ளத்தால் சாலை துண்டிப்பு கிராம மக்கள் கடும் அவதி
பாலம் கட்டும் பணி நிறுத்தம் வெள்ளத்தால் சாலை துண்டிப்பு கிராம மக்கள் கடும் அவதி
ADDED : நவ 29, 2024 04:56 AM

மரக்காணம்: மரக்காணம் அடுத்த சொரப்பட்டில், பாலம் கட்டும்பணி கிடப்பில் போட்டப்பட்டதால் தற்காலிக சாலை வெள்ளத்தில் மூழ்கியதால் போக்குரவத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சொரப்பட்டு கிராமத்தில் இருந்து ஆடவல்லிக்கூத்தான் கிராமம் செல்லும் வழியில் தரைப்பாலம் இருந்தது. இந்த சாலை வழியாக அப்பகுதி மக்கள் மரக்காணம், திண்டிவனம் சென்று வருகின்றனர். மழை காலங்களில் தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கிவிடும்.
இதனால் சொரப்பட்டு கிராம மக்கள் தண்ணீர் வடியும் வரை 10 கி.மீ., துாரம் சுற்றி நகர்புறங்களுக்கு செல்லும் நிலையில் இருந்துவருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, அருகில் தற்காலிக சாலை அமைத்து, உயர் மட்ட பாலம் கட்டும் பணி துவங்கியது. பாலத்தின் பணிகள் 20 சதவீதம் நடந்து கொண்டிருக்கும் பொழுது பணியில் நஷ்டம் ஏற்படும் என கருதி ஒப்பந்ததாரர் பணியை கிடப்பில் போட்டுவிட்டு சென்றுவிட்டார்.
இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணிகள் நடக்காமல் உள்ளது. அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தியும், பல முறை பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கூறியும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்பொழுது பெய்த மழையால் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி உபரி நீர் பெருக்கெடுத்து தற்காலிக சாலை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
இதனால் ஆடவல்லிக்கூத்தான் வழியாக சொரப்பட்டு வங்காரம், தளக்காணிகுப்பம், காயல்மேடு ஆகிய கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.