/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
/
மணல் கடத்திய மாட்டு வண்டி பறிமுதல்
ADDED : நவ 13, 2025 06:57 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே மணல் கடத்திய மாட்டு வண்டியை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருவெண்ணெய்நல்லுார் சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் நேற்று காலை ஆனத்துார் கிராமப் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அப்பகுதியில் உள்ள மலட்டாற்றில் மணல் கடத்தியவர்கள் போலீசாரை கண்டதும் மாட்டு வண்டியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றனர்.
இதையெடுத்து போலீசார் மாட்டுவண்டியை பறிமுதல் செய்து வழக்குப் பதிந்து தப்பியோடியவர்களை தேடி வருகின்றனர்.
இதேபோல் திருவெண்ணெய்நல்லுார் அடுத்த காந்திக்குப்பம் மலட்டாற்றில் மணல் கடத்தியவர்களை போலீசாரை வழக்கு பதிந்து தப்பி ஓடியவர்களை தேடி வருகின்றனர்.

