/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
விழுப்புரம் பள்ளி மாணவர் சிலம்பாட்டத்தில் சாதனை
/
விழுப்புரம் பள்ளி மாணவர் சிலம்பாட்டத்தில் சாதனை
ADDED : நவ 13, 2025 06:57 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் பள்ளி மாணவர் லோகேஷ், மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில், இரண்டாமிடம் பிடித்தார்.
செஞ்சி அடுத்த ஆலம்பூண்டிய ஸ்ரீ ரங்கபூபதி கல்லுாரியில், மாவட்ட அளவிலான 17 வயதுற்குட்பட்டோருக்கான சிலம்பம் போட்டி நடை பெற்றது. இதில், விழுப்புரம் வி.ஆர்.பி., மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 10ம் வகுப்பு மாணவர் லோகேஷ், மாவட்ட அளவில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். இவரது சாதனையை பாராட்டி, பள்ளியின் தாளாளர் சோழன், மாணவர் லோகிஷிற்கு சால்வை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கினார். தலைமை ஆசிரியர் கந்தசாமி, உதவி தலைமை ஆசிரியர் பிரிதிவிராஜ் , ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

