/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
வெள்ளத்தால் பழுதடைந்த பாலம் பஸ் போக்குவரத்து துண்டிப்பு
/
வெள்ளத்தால் பழுதடைந்த பாலம் பஸ் போக்குவரத்து துண்டிப்பு
வெள்ளத்தால் பழுதடைந்த பாலம் பஸ் போக்குவரத்து துண்டிப்பு
வெள்ளத்தால் பழுதடைந்த பாலம் பஸ் போக்குவரத்து துண்டிப்பு
ADDED : டிச 06, 2024 05:05 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த வி.சாத்தனுாரில் வெள்ளத்தால் பழுதடைந்த புதிய பாலத்தில் பஸ் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
சில தினங்களுக்கு முன் பெய்த பெஞ்சல் புயல், மழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடியது. இதில் வி.சாத்தனுாரில் ஓடை வாய்க்காலில் ஆசூர் சாலையில் கட்டப்பட்டிருந்த புதிய பாலம் பழுதாகி பாலத்தின் ஒருபுறம் சேதமடைந்தது.
இதனால், ஆசூர் கிராமத்திற்கு செல்லும் அரசு டவுன் பஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. வி.சாத்தனுார், பொன்னங்குப்பம், ஆசூர் கிராமங்களைச் சேர்ந்த கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் தங்கள் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் அவதியடைந்துள்ளனர்.
பொதுமக்கள் நலன் கருதி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பழுதடைந்துள்ள பாலத்தை விரைந்து சீரமைத்து பஸ் போக்குவரத்து தொட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.