/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி கூட்ரோட்டில் பஸ்களை நிறுத்துவதால் நெரிசல் மாற்று இடத்தை பரிசீலனை செய்ய வேண்டும்
/
செஞ்சி கூட்ரோட்டில் பஸ்களை நிறுத்துவதால் நெரிசல் மாற்று இடத்தை பரிசீலனை செய்ய வேண்டும்
செஞ்சி கூட்ரோட்டில் பஸ்களை நிறுத்துவதால் நெரிசல் மாற்று இடத்தை பரிசீலனை செய்ய வேண்டும்
செஞ்சி கூட்ரோட்டில் பஸ்களை நிறுத்துவதால் நெரிசல் மாற்று இடத்தை பரிசீலனை செய்ய வேண்டும்
ADDED : ஜன 20, 2025 06:41 AM

செஞ்சி: செஞ்சி கூட்ரோட்டில் சென்னை பஸ்கள் நிறுத்துவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தடுக்க பஸ்களை வேறு இடத்தில் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செஞ்சியில் பஸ் நிலையம் காந்தி பஜாரில் உள்ளது. இந்த பஸ் நிலையத்திற்கு திருவண்ணாமலையில் இருந்து சென்னை, புதுச்சேரி செல்லும் பஸ்களும், சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும் பஸ்களும் போவதில்லை. சென்னை செல்லும் பஸ்சை கூட்ரோட்டில் திருவண்ணமலை ரோட்டில் நிறுத்தி பயணிகளை இறக்கி ஏற்றுகின்றனர்.
இதே இடத்தில் திருவண்ணாமலை மார்க்கம் இருந்து வரும் டவுன் பஸ்களும், தனியார் பஸ்களையும் நிறுத்தி பயணிகளை இறக்கி விடுகின்றனர். இதனால் ஒரே நேரத்தில் இங்கு 5 முதல் 7 பஸ்கள் வரை நிறுத்துகின்றனர். செஞ்சி பணிமனை பஸ்கள் 30 நிமிடத்திற்கும் அதிகமாக காத்திருந்து பயணிகளை ஏற்றி செல்கின்றனர். இந்த பஸ்களை கடந்து எந்த வாகனங்களும் செல்ல முடியாமல் அரை கி.மீ., துாரம் வரை அணிவகுத்து நிற்கின்றன. சில நேரம் பஸ்கள் நிரம்ப வில்லை எனில் பின்னால் நிற்கும் வாகனங்களை பற்றி கவலைப்படாமல் பஸ்களை ரோட்டின் குறுக்கே நிறுத்தி டிரைவர்கள் அடவாடி செய்கின்றனர்.
போக்குவரத்து போலீசார் இருந்து பஸ்களை நகர்த்தினால் மட்டும் நெரிசல் சீக்கிரத்தில் குறையும். இல்லை எனில் 5 முதல் 15 நிமிடம் வரையில் வாகனங்கள் நெரிசலில் சிக்கி வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். சில நேரம் நெரிசலில் ஆம்புலேன்ஸ்களும் சிக்கி மேற்கொண்டு நகர முடியாமல் நின்று விடுகின்றன.
இதனால் உள்ளூரை சேர்ந்த இரு சக்கர வாகன ஓட்டிகள் இந்த வழியை தவிர்ந்து, எதிர் பக்கம் உள்ள சாலையில் போக்குவரத்து விதிமுறைக்கு ஆபத்தான வகையில் செல்கின்றனர். இதற்கு நிரந்தர தீர்வு காண சென்னை செல்லும் பஸ்களை திண்டிவனம் சாலையில் உள்ள நிழற்குடை அருகே நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து செஞ்சி போலீசார், அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி சென்னை பஸ்களை திண்டிவனம் சாலையில் சில நாட்களுக்கு சோதனை முறையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்ல வலியுறுத்த வேண்டும். இதில் சிக்கல்கள் இருப்பின் அதை சரி செய்து போக்குவரத்து நெரிசலின்றி பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.