ADDED : அக் 30, 2024 05:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மரக்காணம் : மரக்காணம் அடுத்த கீழ்பேட்டையில் இறைச்சி 25 ஆயிரம் ரூபாய் திருடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மரக்காணம் அடுத்த கீழ்பேட்டையைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன், 52; இ.சி.ஆரில் இறைச்சி கடை நடத்தி வருகிறார். நேற்று காலை கடைக்கு சென்று பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 25 ஆயிரம் ரூபாய் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.