/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
பைபாஸ் சாலை திறந்தும் செஞ்சியில் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை: அறிப்பு பலகை வைக்காததால் வாகன ஓட்டிகள் குழப்பம்

ADDED : ஏப் 22, 2024 05:46 AM
செஞ்சி:செஞ்சியில் பைபாஸ் சாலை திறந்து பல மாதங்கள் கடந்த பின்னரும், பைபாஸ் துவங்கும் இடத்தில் முறையான அறிவிப்பு பலகை இல்லாததால் வாகன ஓட்டிகள் செஞ்சி நகரத்தின் வழியாகவே செல்கின்றனர். இதனால் பைபாஸ் திறந்தும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.
திண்டிவனத்தில் இருந்து கிருஷ்ணகிரி வரை உள்ள 178 கி.மீ., சாலையை 7 மீட்டரில் இருந்து 10 மீட்டர் சாலையாக அகலப்படுத்தும் பணி கடந்த 2011ம் ஆண்டு ஏப்ரல் மாதம் துவங்கியது.
இந்த பணி 13 ஆண்டுகள் முடிந்தும், இதுவரை நிறைவடையாமல் உள்ளது.
இதன் ஒரு பகுதியாக திண்டிவனம், செஞ்சி, கீழ்பென்னாத்துார், திருவண்ணாமலை, ஊத்தங்கரை உட்பட 8 நகரங்களில் பைபாஸ் சாலை போடப்பட்டுள்ளது.
செஞ்சியில் பைபாஸ் சாலை பணிகள் முடிந்து போக்குவரத்து துவங்கி 3 மாதங்கள் ஆகிறது. இதில், திருவண்ணாமலையில் இருந்து வரும் இடத்தில் பைபாஸ் துவங்குவது புரியும்படி உள்ளது. இதனால் அங்கிருந்து வரும் வாகனங்களில் பெரும்பாலானவை பைபாஸ் வழியாக செஞ்சியைக் கடந்து விடுகின்றன.
ஆனால், சென்னையில் இருந்தும், புதுச்சேரியில் இருந்தும் திண்டிவனம் வழியாக வரும் போது சாலைகளின் வடவமைப்பு தெளிவில்லாமல் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது.
இந்த இடத்தில் பைபாஸ் துவங்குகிறது என்ற அறிவிப்பும் இல்லை. பெங்களூரூ, திருவண்ணாமலை, ஓசூர், கிருஷ்ணகிரிக்கு பைபாஸ் வழியாக செல்லலாம் என எந்த அறிவிப்பும் இல்லை.
இதனால் இந்த மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள் பைபாஸ் வழியாக செல்லாமல் செஞ்சி நகரின் வழியாகவே செல்கின்றன. பைபாஸ் சாலை இருந்தும் பயனில்லாமல் உள்ளது.
இதனால் செஞ்சியில் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டு அடிக்கடி டிராபிக் ஜாம் ஏற்படுகிறது. எனவே, செஞ்சியில் பைபாஸ் துவங்கும் இடத்தில் எல்லா திசையிலும் முறையான அறிவிப்பு பலகைகளை வைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.